குழந்தைகள் முன்னேற்ற கழகம் - படத்தின் ட்ரைலர் வெளியீடு.! லிங்க் உள்ளே.!
விஜய் டிவி ரியோவின் புதிய படத்திற்கு இப்படி ஒரு பெயரா; தலைப்பே செமயா இருக்கே.!
விஜய் டிவி விஜே ரியோ நடிக்கும் புதிய படத்திற்கு நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது.
ரியோ ஆரம்பத்தில் சன் தொலைக்காட்சி நிறுவனத்தின் மியூசிக் சேனலில் தொகுப்பாளராக பணிபுரிந்தார். பிறகு விஜய் Tv யில் பல ஆண்டுகளாக நடத்தப்பட்டு வந்த சரவணன் மீனாட்சி தொடரில் இறுதியில் மீனாட்சிக்கு ஜோடியாக நடித்தவர் தான் நடிகர் ரியோ ராஜ்.இந்த நிகழ்ச்சி மக்களிடையே பெரிய அளவில் வரவேற்பை பெற்றது.
தற்போது சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து, பிரபல நடிகர் சிவகார்த்திகேயன் கனா படத்திற்கு பிறகு தயாரிக்கும் நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா என்ற புதிய படத்தில் ஹீரோவாக நடிக்கிறார்.
பிளாக் ஷீப் யூடியூப் புகழ் கார்த்திக் வேணுகோபாலன் இந்தப் படத்தை இயக்கி வருகிறார். ரியோவுக்கு ஜோடியாக ஷெரில் என்கிற புதுமுக நாயகி தமிழில் அறிமுகமாகிறார். தவிர, நாஞ்சில் சம்பத், காமெடி ரோலில் ஆர்.ஜே.விக்னேஷ் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடிப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.