பிக்பாஸ் சௌந்தர்யாவின் நடிப்பில் அட்டகாசமான டிஸ்டன்ட் திரைப்படம்; ட்ரைலர் வைரல்.!
சிவகார்த்திகேயனுக்கு தடபுடலாக விருந்து படைத்த முன்னணி நடிகரின் மகன்!
நடிகர் சிவகார்த்திகேயன் சின்னத்திரையான விஜய் டிவியின் மூலம் அறிமுகமானவர். அதனை தொடர்ந்து வெள்ளிதிரையில் கால் பதித்து தனது கடின உழைப்பால் உயர்ந்து தற்போது ஒரு முன்னணி நடிகராக திகழ்கின்றார்.
மேலும் இவர் நடிப்பில் வெளியான ரஜினி முருகன், எதிர்நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம் போன்ற படங்கள் மூலம் மக்கள் மனதில் இன்னும் அதிகமாக அவரை விரும்ப வைத்தது. சமீபத்தில் வெளியான நம்ம வீட்டு பிள்ளை ஒரு குடும்ப படமாகவும், அனைத்து தரப்பினரும் விரும்பும் வகையில் இருந்தது.
மேலும் இந்த படம் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் தற்போது நடிகர் சிவகார்த்திகேயன் இயக்குனர் மித்ரன் இயக்கத்தில் ஹீரோ படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில் தற்போது நடிகர் நாகார்ஜூனாவின் மகன் நடிகர் அகில் சிவகார்த்திகேயனை வீட்டிற்கு அழைத்து தடபுடலாக விருந்து கொடுத்துள்ளார்.தற்போது அவர்கள் எடுத்து கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.