ரஞ்சிதமே பாடலுக்கு க்யூட்டாக குத்தாட்டம் போட்டுள்ள சிறுமி... வீடியோவை பார்த்து ராஷ்மிகா என்ன கூறியுள்ளார் என்று பாருங்கள்!!



Small girl baby cute dance for ranjithame song

இயக்குனர் வம்சி இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள திரைப்படம் வாரிசு. இப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த 11 ஆம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியானது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதுடன் வசூல் சாதனையும் படைத்துள்ளார்.

வாரிசு படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் சரத்குமார், பிரகாஷ் ராஜ், யோகி பாபு ஆகிய முக்கிய பிரபலங்கள் பலர் நடித்துள்ளார்கள். இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.

தமன் இசையில் உருவாகிய ரஞ்சிதமே பாடல் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் ஒரு சுட்டிக்குழந்தை ரஞ்சிதமே பாடலுக்கு செம க்யூட்டாக நடனம் ஆடிய வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வீடியோவைப் பகிர்ந்த நடிகை ராஷ்மிகா மந்தனா, கியூட்டஸ்ட் சூப்பர் ஸ்டார் என ஹார்ட் ஸ்மைலியை பகிர்ந்துள்ளார்.