குழந்தைகள் முன்னேற்ற கழகம் - படத்தின் ட்ரைலர் வெளியீடு.! லிங்க் உள்ளே.!
வனிதாவின் மகனா நீங்க? ரசிகரின் கேள்விக்கு ஸ்ரீஹரி கொடுத்த ஷாக் பதில்!! என்ன இப்படி சொல்லிட்டாரே.!
தமிழ் சினிமாவின் நட்சத்திர தம்பதிகளான விஜயகுமார் மற்றும் மஞ்சுளாவின் மகள் வனிதா. இவர் விஜய் நடிப்பில் வெளிவந்த சந்திரலேகா படத்தின் மூலம் ஹீரோயினாக சினிமாவில் அறிமுகமானார். பின் அவர் விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பெருமளவில் பிரபலமானார். அதனைத் தொடர்ந்து வனிதா குக் வித் கோமாளி, பிக்பாஸ் ஜோடிகள் என பல நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டுள்ளார்.
மேலும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டிருந்தார். வனிதா கடந்த 2000ம் ஆண்டு நடிகர் ஆகாஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு விஜய் ஸ்ரீஹரி என்ற மகனும் ஜோவிகா என்ற மகளுக்கு பிறந்த நிலையில் கருத்து வேறுபாட்டால் இருவரும் பிரிந்தனர். அதனைத் தொடர்ந்து ஸ்ரீஹரி தனது தந்தை மற்றும் தாத்தாவுடன் வளர்ந்து வருகிறார்.
ஸ்ரீஹரி சில தினங்களுக்கு முன்பு தனது 21வது பிறந்த நாளைக் கொண்டாடினார். அதனை முன்னிட்டு வனிதா அவருக்கு மிகவும் உருக்கமாக வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் ஸ்ரீ ஹரியிடம் ரசிகர் ஒருவர், வனிதாவோட பையனா நீங்கள் என கேட்டுள்ளார். அதற்கு ஸ்ரீஹரி ‘நான் ஆகாஷோட பையன் ப்ரோ’ என நறுக்கென பதில் கூறியுள்ளார்.