ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
9 ஆண்டு கால மோதலுக்குப் பின் சூப்பர் ஸ்டாருடன் இணைந்த பிரபலம்.! அக்டோபர் 23 அட்டகாசமான அப்டேட்.!
பாலிவுட் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக விளங்கி வருபவர் சல்மான் கான். இவரது நடிப்பில் வெளியான ஏக் தா டைகர் திரைப்படத்தின் மூன்றாம் பாகம் டைகர் 3 என்ற பெயரில் நவம்பர் 12ஆம் தேதி தீபாவளியை முன்னிட்டு வெளியாக இருக்கிறது.
இந்த திரைப்படம் இதற்கு முன்பு ஏக் தா டைகர் என்ற பெயரில் முதல் பாகம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதனைத் தொடர்ந்து டைகர் ஜிந்தா ஹை என்ற பெயரில் இரண்டாவது பாகம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. தற்போது இதன் மூன்றாம் பாகமான டைகர் 3 வெளியாக இருக்கிறது.
இந்த திரைப்படத்தில் சல்மான் கான் ரா ஏஜெண்டாக நடித்திருக்கிறார். அவருக்கு ஜோடியாக கேத்தரினா கைஃப் ஜோயா என்ற பெயரில் நடித்துள்ளார். உளவு நிறுவனம் மற்றும் ராணுவம் ஆகியவற்றின் பின்னணியில் இந்த திரைப்படத்தின் கதைகள் படமாக்கப்பட்டு இருக்கிறது. இந்தத் திரைப்படத்தில் பாலிவுட் பாடகரான அர்ஜித் சிங் முதல்முறையாக சல்மான் கானுக்கு பாடல் பாடியிருக்கிறார்.
அர்ஜித் சிங் மற்றும் சல்மான் கான் இடையேயான மோதல் ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது முடிவுக்கு வந்திருக்கிறது. இதனை சல்மான் கான் அவரது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் முதல் முறையாக அர்ஜித் சிங் தனக்கு பாடல் பாடியிருப்பதாகவும் அதில் குறிப்பிட்டு இருக்கிறார். இந்தப் பாடல் வருகின்ற 23ஆம் தேதி வெளியாக இருக்கிறது.