96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
'23' வயது கள்ளக்காதலிக்காக குடும்பத்தை வீட்டிலிருந்து விரட்டிய ஜாக்குவார் தங்கம்"... மனைவி பரபரப்பு புகார்.!!
தமிழ் சினிமாவின் பிரபல சண்டை பயிற்சியாளர் ஆன ஜாகுவார் தங்கம் 23 வயது பெண்ணுடன் கள்ளத்தொடர்பில் இருப்பதாக அவரது மனைவி புகார் அளித்திருக்கும் சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. தங்கப்பழம் என்ற இயற்பெயர் கொண்ட ஜாகுவார் தங்கம் 1978 ஆம் ஆண்டு வெளியான மீனா பஜார் என்ற திரைப்படத்தின் மூலம் ஸ்டண்ட் கலைஞராக அறிமுகமானார்
தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் புரட்சிக் கலைஞர் எம்ஜிஆர் இவரை தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தினார். பிரசாந்த் நடித்த வைகாசி பொறந்தாச்சு திரைப்படத்தின் மூலம் சண்டை இயக்குனராக அறிமுகமானார். தமிழ் இந்தி உட்பட பிராந்திய மொழிகளில் 1,000-திற்கும் அதிகமான படங்களுக்கு சண்டை பயிற்சியாளராக பணியாற்றி இருக்கிறார்.
இவர் 1984 ஆம் ஆண்டு சாந்தி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு விஜய் சிரஞ்சீவி மற்றும் ஜெய் ஜெ. ஜாகுவார் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் அவரது மனைவி சாந்தி பரபரப்பான புகார் ஒன்றை அளித்திருக்கிறார். அந்தப் புகாரில் தனது கணவருக்கு 23 வயது இளம் பெண்ணுடன் கள்ள தொடர்பு இருப்பதாக தெரிவித்துள்ளார்.
மேலும் கடந்த 13 ஆம் தேதி தனது கள்ளக்காதலியை வீட்டிற்கு அழைத்து வந்த ஜாகுவார் தங்கம் தன்னையும் தனது மகன்களையும் வீட்டை விட்டு வெளியேற்றி விட்டதாக தெரிவித்திருக்கிறார். எனவே அவரது கள்ளக்காதலியை அழைத்து கண்டிக்குமாறு தனது புகாரில் சாந்தி தெரிவித்துள்ளார். இந்தப் புகார் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் சினிமா வட்டாரத்தில் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது.