#BigBreaking: பெரியார் சிலை குறித்த சர்ச்சை பேச்சு.. தலைமறைவாக இருந்த சினிமா ஸ்டண்ட் இயக்குநர் கனல் கண்ணன் கைது.! போலீசார் அதிரடி..!!



stunt master kanal kannan arrested by chennai police

இந்து முன்னணி சார்பில் "இந்துக்கள் உரிமை மீட்பு" என்ற பெயரில் தமிழகம் முழுவதும் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. இந்த பிரச்சாரத்தின் தொடக்க விழா சென்னை மதுரவாயில் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக நடைபெற்றது.

அப்போது அதில் பங்கேற்ற சினிமா நடிகரும், ஸ்டண்ட் கலைஞருமான கனல் கண்ணன் "திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் லட்சக்கணக்கான பக்தர்கள் தினசரி சாமி தரிசனம் செய்து வருகின்றனர். பக்தர்கள் கோவிலுக்கு செல்லும் வழியில் கடவுள் இல்லை என்று சொன்னவரின் பெரியார் சிலை உள்ளது. 

இந்த சிலை என்று உடைக்கப்படுகிறதோ, அன்றுதான் இந்துக்களின் எழுச்சி" என்று கூறியிருந்தார். இவரின் இந்த பேச்சு சமூக வலைத்தளங்களில் வைரலாகியதை தொடர்ந்து, கடுமையான எதிர்ப்புகள் கிளம்பியது. மேலும் தந்தை பெரியார் திராவிட கழகம் சார்பில், கனல் கண்ணனை கைது செய்யக்கோரி சென்னை மாநகர காவல்துறை ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டது. 

Stunt master

இந்த புகாரை ஏற்றுக்கொண்ட காவல்துறையினர் பொதுஅமைதியை சீர்குலைத்தல் சட்டப்பிரிவின் பேரில் வழக்குபதிவு செய்தனர். மேலும் இந்த வழக்கில் முன்ஜாமின் கேட்டு கனல்கண்ணன் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு கோட்டில் மனு தாக்கல் செய்த நிலையில், இரு தரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதி முன் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தார். 

தொடர்ந்து கனல் கண்ணனை கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் கமலக்கண்ணன் தலைமறைவாகிய நிலையில், காவல்துறையினர் தேடி வந்தனர். இன்று அவர் பாண்டிச்சேரியில் இருப்பதாக தகவல் கிடைக்கவே, புதுச்சேரியில் வைத்து சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் அவரை கைது செய்துள்ளனர்.