96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
இயக்குனராக அவதாரம் எடுக்கும் பிரபல தல, தளபதி பட ஸ்டண்ட் மாஸ்டர்! இவர் சும்மாவே அதிர வைப்பாரே!!
கோலிவுட் சினிமாவில் பல முன்னணி நடிகர்களின் படங்களில் அதிரடி ஆக்ஷன் காட்சிகளை உருவாக்கியவர் பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா. இவர் தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த ஜில்லா, பைரவா மற்றும் சமீபத்தில் வெளிவந்து ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற மாஸ்டர் உள்ளிட்ட பல திரைப்படத்திலும் அதிரடியான சண்டை காட்சிகளை உருவாக்கியுள்ளார்.
மேலும் அவர் தல நடிப்பில் வெளிவந்து செம ஹிட்டான என்னை அறிந்தால், வீரம், விவேகம், விசுவாசம் போன்ற பல படங்களுக்கும் அனைவரும் ரசிக்கும் வகையிலும், மிரளும் வகையிலும் ஆக்சன் காட்சிகளை அமைத்தார். இவர் சண்டை மாஸ்டராக மட்டுமின்றி, பல படங்களில் மிரட்டும் வில்லனாகவும் நடித்துள்ளார்.
இந்த நிலையில் அவர் கூடிய விரைவில் இயக்குனராக அவதாரம் எடுக்கவுள்ளார் என தகவல்கள் பரவி வருகிறது . பிரபல முன்னணி இயக்குனரான ஏஎல் விஜய் கதை மற்றும் திரைக்கதை அமைக்கவுள்ள படத்திற்கு ஸ்டன்ட் மாஸ்டர் சில்வா இயக்குனராக உள்ளாராம். மேலும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.