சுஜாவோட குழந்தையின் பெயர் இதுவா? இப்போ எப்படி இருக்காங்க பார்த்தீர்களா!! இணையத்தையே கலக்கும் புகைப்படம் இதோ!!



suja baby naming photo viral

14 வயதில் சினிமாத்துறையில் நுழைந்து இதுவரை 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து இருப்பவர் சுஜா வருணி . நாயகியாக அறிமுகமானாலும், சினிமாவில் ஒற்றை பாடலுக்கு தான் இவர் அதிகமாக நடனமாடி இருக்கிறார்.இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்களிடையே பெருமளவில் பிரபலமானார்.

அதனை தொடர்ந்து  சுஜா வருணியும், நடிகர் திலகம் சிவாஜிகணேசனின் மகன் ராம்குமாரின் மகன்  சிவகுமாரும் 10 ஆண்டுகளாக  காதலித்து வந்தநிலையில் கடந்த ஆண்டு  இருவருக்கும் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது.

sujaa

இந்நிலையில் சுஜா கர்ப்பமாக இருந்த நிலையில், சமீபத்தில் அழகான ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். இதனை சுஜாதாவின் கணவர் மிகவும் உற்சாகத்தோடு தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். அதனை தொடர்ந்து சமீபத்தில் சுஜா தனக்கு பிரசவம் பார்த்த மருத்துவரின் கையில் குழந்தை உள்ள புகைப்படத்தை வெளியிட்டு, அவருக்கு மனதார நன்றியை தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தற்போது குழந்தைக்கு பெயர் சூட்டும்விழா நடைபெற்றுள்ளது. அப்பொழுது குழந்தைக்கு அத்வைத் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. அப்பொழுது  குழந்தையை தங்களது கையில் வைத்தபடி சுஜா மற்றும் அவரது கணவர் எடுத்த புகைப்படம் ஒன்றை சுஜா வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.