புகழின் உச்சத்தில் இருக்கும் காமெடி நடிகர் சூரி பேசிய முதல் வசனம் இந்த பிரபலத்துடனா! வெளியான வீடியோவால் ஷாக்கான ரசிகர்கள்.
இன்றைய தமிழ் சினிமாவின் நகைச்சுவை நடிகர்களில் பிரபலமானவர் நடிகர் சூரி. பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ள இவர் வெண்ணிலா கபடி குழு திரைப்படத்தில் வந்த பரோட்டா காமெடி மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார்.
அதன்பின்னர் விஜய், சூர்யா, விஷால் என தமிழ் சினிமாவின் பிரபல நடிகர்கள் படத்தில் முன்னணி நகைச்சுவை நடிகராக நடித்துள்ளார்.மேலும் இவர் இன்று புகழின் உச்சியில் இருந்து வருகிறார்.
அதுமட்டுமின்றி ஆங்கிலத்தை தவறு தவறாக பேசுவதையே தனது யுத்தியாக கொண்டு செயல்படுகிறார். அதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் தனி இடத்தை பிடித்துள்ளார்.
இந்நிலையில் தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் 20 வருடங்களுக்கு முன்பு நான் பேசிய முதல் வசனம் என பதிவிட்டுள்ளார். அதில் அவர் பிரபல காமெடி நடிகர் கவுண்டமணியிடம் பேசியுள்ளார்.தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகின்றது.
20 years back ❤️
— Actor Soori (@sooriofficial) September 25, 2019
சினிமாவில் நான்
பேசிய முதல் வசனம்.
நன்றி கவுண்டமணி சார் 🙏
நன்றி சுந்தர்.சி அண்ணன் 🙏
படம் “கண்ணன் வருவான்” (2000) pic.twitter.com/9cjwXf4uWV