96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
சென்னையில் ரீ-ரிலீசாகும் வாரணம் ஆயிரம்: 1 மணிநேரத்தில் முன்பதிவு செய்த ரசிகர்கள்..!
கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், ஹாரிஸ் ஜெயராஜ் இசையில், ரத்னவேலு ஒளிப்பதிவில், க்ளவுட் நைன் மூவிஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவான திரைப்படம் வாரணம் ஆயிரம்.
இப்படம் கடந்த 14 நவம்பர் 2008 அன்று வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. பலரின் வாழ்வியலில் கலந்த காதல் திரைப்படமான வாரணம் ஆயிரத்திற்கு, இன்று வரை வரவேற்பு இருக்கிறது.
படத்தில் சூர்யா, சமீரா ரெட்டி, சிம்ரன், திவ்ய ஸ்பந்தனா, தீபா நரேந்திரன், வீரா, பப்லூ பிரித்விராஜ் உட்பட பலரும் நடித்திருந்தனர். படம் வெளியாகிய 15 ஆண்டுகள் கடந்துவிட்டன.
இந்நிலையில், சென்னையில் உள்ள வடபழனி கமலா திரையரங்கில், வாரணம் ஆயிரம் திரைப்படம் திங்கட்கிழமை மாலை 06:30 மணிகாட்சியாக ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு திரையிடப்படுகிறது.
இது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தவே, பலரும் படத்தை பார்க்க தற்போதே முன்பதிவு செய்துவிட்டனர்.
GOOD NEWS ✨
— Kamala Cinemas (@kamala_cinemas) December 15, 2023
The next most awaited and wanted Re-Release is here ‼️@Suriya_offl sir’s all time favourite ‘VAARANAM AAYIRAM’ 🔥 exclusive only at your Kamala Cinemas
From Monday (18/12/23) evening at Kamala Main Screen
Bookings will open at 6:30 P.M today sharp
Get ready 💥