96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
கீர்த்தி சுரேஷுடன் இணைந்து படம் பார்க்கச் சென்ற முன்னணி இயக்குனர். அது இந்த படம் தான்!!
நடிகர் கதிர், கயல் ஆனந்தி, யோகி பாபு உள்ளிட்டோர் நடித்து நேற்று முன்தினம் வெளியான திரைப்படம் பரியேறும் பெருமாள். இப்படத்தை இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கி இருந்தார். இயக்குனர் பா.ரஞ்சித் தயாரிப்பில் உருவாகி இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார்.
இப்படத்தை பார்த்த அனைத்து ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் நடிகர் கதிரின் நடிப்பையும் மற்றும் திருநெல்வேலியின் அழகை மிக நேர்த்தியாக காட்டி படத்தை ரசிக்கும் படி செய்த இயக்குனர் மாரி செல்வராஜையும் வெகுவாக பாராட்டி வருகின்றனர். இதனால் படத்திற்கு திரையரங்குகளில் கூட்டம் நிரம்பி வழிந்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில் இப்படத்தை இயக்குனர் அட்லி உடன் இணைந்து நடிகை கீர்த்தி சுரேஷ் மற்றும் பிரியா அட்லீ மற்றும் மெர்சல் பட ஒளிப்பதிவாளர் விஷ்ணு ஆகியோர் நேற்று இரவு காட்சி சென்று பார்த்தனர்.