திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
பார்த்திபனின் வித்தியாச படைப்பு டீன்ஸ்.! மூன்று நாட்களில் செய்த வசூல் எவ்வளவு தெரியுமா??
தமிழ் சினிமாவில் எப்பொழுதும் வித்தியாசமான படைப்புகளை கொடுக்கும் இயக்குனர்களுள் ஒருவர் பார்த்திபன். அவரது இயக்கத்தில் வெளிவந்த பல படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ஹிட்டாகியுள்ளது. மேலும் தேசிய விருதினையும் பெற்றுள்ளது.
பார்த்திபனின் புதிய படைப்பு
இந்த நிலையில் தற்போது பார்த்திபன் இயக்கத்தில் வெளிவந்துள்ள திரைப்படம் டீன்ஸ். இப்படத்தில் அவர் நடித்தும் உள்ளார். 13 குழந்தைகளை வைத்து உருவாகியுள்ள இந்த படம் கடந்த 12-ஆம் தேதி வெளிவந்தது. மேலும் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருவதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: கெத்து காட்டும் விஜய் சேதுபதியின் மகாராஜா.! இதுவரை ஈட்டிய வசூல் எவ்வளவு தெரியுமா??
3 நாட்களில் வசூல்
இந்த நிலையில் டீன்ஸ் மூன்று நாட்களில் படைத்த வசூல் குறித்த தகவல் வெளிவந்துள்ளது. அதாவது முதல் நாளில் இந்த படம் வெறும் 7 லட்சம் ரூபாய் மட்டுமே சம்பாதித்த நிலையில், அடுத்தடுத்த நாட்களில் படத்தின் வசூல் அதிகரித்ததாக கூறப்படுகிறது. அதாவது மூன்று நாட்களில் டீன்ஸ் திரைப்படம் 51 லட்சம் வசூல் செய்ததாக தகவல்கள் பரவி வருகிறது.
இதையும் படிங்க: என்னது தந்தையின் படத்தில் நடிக்க போகிறாரா அதிதி சங்கர்... அவரே கூறிய லேட்டஸ்ட் அப்டேட்ஸ்!!