மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
என்னது தந்தையின் படத்தில் நடிக்க போகிறாரா அதிதி சங்கர்... அவரே கூறிய லேட்டஸ்ட் அப்டேட்ஸ்!!
தமிழ் சினிமாவில் பிரமாண்ட இயக்குனர்களுள் ஒருவராக திகழ்பவர் இயக்குனர் சங்கர். இவரின் படங்கள் மீது ரசிகர்கள் மத்தியில் தனி எதிர்பார்ப்பு எப்போதும் இருந்து வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் இவர் இயக்கத்தில் இந்தியன் 2 திரைப்படம் வெளியாகியுள்ளது.
இந்தியன் 2 திரைப்படம் கிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கு மேலாக இயக்கப்பட்டு எப்போது வெளியாகும் என ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்த நிலையில் ஒரு வழியாக கடந்த 12 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ஆனால் இப்படம் ரசிகர்கள் மத்தியில் விமர்சன ரீதியாகவும் சரி வசூல் ரீதியாகவும் சற்று பின்னடைவை சந்தித்துள்ளது.
இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட இயக்குனர் ஷங்கரிடம் அதிதி ஷங்கரை எப்போது உங்களுடைய இயக்கத்தில் பார்க்கலாம் என கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த சங்கர் கூடிய விரைவில் அவரை என்னுடைய படத்தில் பார்க்கலாம். அவருக்காக ஒரு கதாபாத்திரம் தயாராகி வருகிறது. ஒரு அப்பாவாக அல்லாமல் ஒரு இயக்குனராக அதிதியிடம் சிறந்த நடிகைக்கான அம்சங்கள் இருப்பதை கண்டுபிடித்தேன் என கூறியுள்ளார்.
இதையும் படிங்க: இளம் வில்லன் நடிகருடன் கைகோர்க்கும் அதிதி ஷங்கர்.! வைரலாகும் புகைப்படம்.! எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!!
இதையும் படிங்க: அடேங்கப்பா இவ்வளவா!! இந்தியன் 2 படத்திற்காக இயக்குனர் சங்கர் வாங்கிய சம்பளம் எத்தனை கோடி தெரியுமா.?