படப்பிடிப்பில் வழுக்கி விழப் பார்த்த நடிகர் விஜய் தேவரகொண்டா..! பதறிப் போய் தாங்கி பிடித்த படக்குழு.! வைரல் வீடியோ.!



telugu-actor-vijay-devarakonda-lost-his-balance-while-w

இந்திய அளவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக மாறிவிட்டார் நடிகை விஜய் தேவரகொண்டா. கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான ஒரு காமெடி படத்தில் அறிமுகமான இவர், 2016 ஆம் ஆண்டு வெளியான பெல்லி ஜூப்பலூ என்ற படத்தில் சிறப்பாக நடித்ததற்காக இவருக்கு தேசிய விருது கிடைத்தது.

இதனை தொடர்ந்து கடந்த 2017-ம் ஆண்டு வெளியான அர்ஜூன் ரெட்டி திரைப்படம் இவரை இந்திய அளவில் பிரபலமாக்கியது. இந்த படத்திற்கு பிறகு பெண்கள் உட்பட ஏகப்பட்ட ரசிகர்கள் இவருக்கு உருவானார்கள். இதனை அடுத்து இவர் நடித்த மகாநதி , கீதா கோவிந்தம் மற்றும் டாக்ஸிவாலா என அணைத்து படங்களும் அடுத்தடுத்து ஹிட் கொடுத்தது.

vijay devarakonda

இந்நிலையில் இயக்குனர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் புது படம் ஒன்றில் நடித்துவருகிறார் விஜய் தேவார கொண்டா. இந்த படத்தின் படப்பிடிப்பிற்காக சென்றுகொண்டிருந்தபோது விஜய் தேவரகொண்டா திடீரென வழுக்கி விழுந்துள்ளார். உடனே அருகில் இருந்த படக்குழுவினர் அவர் கீழே விழாமல் தாங்கி பிடித்தனர்.

இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகிவருகிறது.