மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
போதைப்பொருளுடன் நடந்த பிறந்தநாள் பார்ட்டி; சிக்கிய பிரபல நடிகை.. அதிர்ச்சியில் திரையுலகம்.!
தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த திரைப்பட நடிகை, செல்வந்தர் வீட்டு பிள்ளைகள் ஆகியோர் கலந்துகொண்ட பார்ட்டி ஒன்று பண்ணை வீட்டில் வைத்து தெலுங்கானாவில் நடைபெற்றுள்ளது. பிறந்தநாள் கொண்டாட்டம் என்ற பெயரில் நடந்த பண்ணை பார்ட்டியில் போதைப்பொருள் பயன்பாடும் இருந்துள்ளது.
பண்ணை வீட்டில் பார்ட்டி
இதுகுறித்த தகவல் அறிந்த காவல் துறையினர், பண்ணை வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது பல செல்வந்தர் வீட்டு பிள்ளைகளும், திரைத்துறை பிரபலங்களும் கைது செய்யப்பட்டனர். இந்த கும்பலில் நடிகை ஹேமா என்பவரும் இருப்பதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், அதனை நடிகை மறுத்து வந்தார்.
இதையும் படிங்க: "படங்களில் கவர்ச்சியாக நடிக்க எனக்கு விருப்பமில்லை" ஆனால் தனுஷ் கூட.. மனம் திறந்து பேசிய நடிகை தன்ஷிகா.!?
நடிகை விரைவில் கைது
இதனிடையே, அவரிடமும் அதிகாரிகள் விசாரணை நடத்தி, மருத்துவ பரிசோதனை செய்தனர். இந்த சோதனையில் நடிகை ஹேமாவும் போதைப்பொருள் பயன்படுத்துவது உறுதியானதை தொடர்ந்து, காவல் துறையினர் அவரை விரைவில் கைது செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பார்ட்டியில் கலந்துகொண்ட பலரும் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: "என் மன அழுத்தத்திற்கு இது தான் காரணம்" மனம் திறந்து பேசிய மனிஷா கொய்ராலா.!?