மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"படங்களில் கவர்ச்சியாக நடிக்க எனக்கு விருப்பமில்லை" ஆனால் தனுஷ் கூட.. மனம் திறந்து பேசிய நடிகை தன்ஷிகா.!?
நடிகை தன்ஷிகாவின் திரைப்பயணம்
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக இருந்து வருபவர் நடிகை தன்ஷிகா. இவர் முதன் முதலில் பேராண்மை திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். முதல் படமே மிகப் பெரும் வெற்றியை அடைந்தது, தன்ஷிகாவின் நடிப்பு ரசிகர்களால் கவனிக்கப்பட்டு வந்தது. இப்படத்திற்கு பின்பு நடிகர் ஆதிக்கு கதாநாயகியாக அரவான் திரைப்படத்தில் தனது அட்டகாசமான நடிப்பு திறமையை வெளிப்படுத்தி இருந்தார்.
விருதுகளை வாங்கி குவித்த தன்ஷிகா
மேலும் அரவான் திரைப்படத்திற்காக தேசிய விருதை வென்ற நடிகை தன்ஷிகா படத்திற்கு பின்பு கபாலி, பரதேசி என்ற இரு ஹிட் திரைப்படங்களிலும் நடித்து தனக்கான தனி இடத்தை தமிழ் திரைத்துறையில் நிலைநாட்டி பிரபலமான நடிகையாக வலம் வந்தார். படங்களில் நடித்ததற்காக பிலிம் பேர் விருதையும் வென்றார்.
இதையும் படிங்க: "என் மன அழுத்தத்திற்கு இது தான் காரணம்" மனம் திறந்து பேசிய மனிஷா கொய்ராலா.!?
இதன்பிறகு விழித்திரு, உரு, காலக்கூத்து, காத்தாடி, இருட்டு, லாபம் போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தார். ஆனால் படங்கள் பெரிதளவில் வெற்றி பெறவில்லை என்பதால் காலப்போக்கில் நடிகை தன்ஷிகாவிற்கு தமிழில் பட வாய்ப்புகள் குறைந்துவிட்டன. இதனால் சமூக வலைத்தளங்களில் கவர்ச்சியாக புகைப்படம் எடுத்து பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வந்தார்.
தன்ஷிகாவின் சமீபத்திய பேட்டி
இது போன்ற நிலையில், சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்து கொண்ட நடிகை தன்ஷிகா, கவர்ச்சியாக நடித்த படங்களில் நடிப்பதை பற்றி பேசி இருக்கிறார். அதாவது, "திரைப்படங்களில் கவர்ச்சியாக நடிப்பது எனக்கு பிடிக்காது. முத்த காட்சிகளில் நடிப்பதில் விருப்பம் இல்லை ஆனால் தனுஷுடன் நடிப்பதற்கு ஆசைப்படுகிறேன்" என்று மனம் திறந்து பேசினார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
இதையும் படிங்க: உச்சகட்ட கவர்ச்சியில் முன்னழகை முழுவதுமாக காட்டிய ஷிவானி நாராயணன்.? ரசிகர்கள் அதிர்ச்சி.!?