திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
எந்தவொரு ஆர்பாட்டமும் இல்லாம டெல்டா மக்களுக்காக தல என்ன செய்திருக்கார் தெரியுமா? முதலமைச்சரே வெளியிட்ட தகவல்.!
தமிழகத்தில் கஜா புயலால் நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், கடலூர், புதுக்கோட்டை உட்பட பல மாவட்டங்களில் மரங்கள்,மின்கம்பங்கள் அடியோடு சாய்ந்து பல வீடுகள் சேதமடைந்துள்ளது.மேலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் இன்றுவரை பல ஊர்கள் இருளில் மூழ்கியுள்ளது.
இந்நிலையில் உண்ண உணவின்றி, இருக்க இடமின்றி தவித்து வரும் மக்களுக்கு தொண்டு நிறுவனங்கள், தன்னார்வலர்கள், திரைப்பட பிரபலங்கள் என பலரும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான பொருட்கள் மற்றும் நிதியுதவி செய்து வருகின்றனர்.
இந்நிலையில் மக்களுக்கு உதவ தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் எந்த ஒரு ஆர்ப்பாட்டமும் இல்லாமல் ரூ 15 லட்சத்தை முதலமைச்சரிடம் கொடுத்துள்ளார். அதனை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களே வெளியிட்டுள்ளார்.
மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் கோரிக்கையை ஏற்று, "கஜா புயலால்" ஏற்பட்ட பாதிப்புகளுக்கு நிவாரணம், சீரமைப்பு பணிகளுக்காக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு, பொதுமக்களால் நேரடியாகவும் ஆன்லைன் மூலமாகவும் இதுவரை வழங்கப்பட்ட தொகை 13 கோடியே 32 லட்சத்து 67 ஆயிரத்து 288 ரூபாய். #Gaja pic.twitter.com/5UZvQRts96
— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) 24 November 2018