மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
Cinema Breaking: பூஜையுடன் தொடங்கியது தலைவர் 170 படப்பிடிப்பு: அசத்தல் கிளிக்ஸ் உள்ளே.!
லைக்கா புரொடக்சன்ஸ் தயாரிப்பில், டிஜெ ஞானவேல் இயக்கத்தில், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், அனிரூத் இசையில் உருவாகி வரும் திரைப்படம் தலைவர் 170. படத்தின் தலைப்பு தற்போது வரை இறுதியாகவில்லை.
இது ரஜினிகாந்தின் 170 வது திரைப்படம் ஆகும். இப்படத்தின் படப்பிடிப்பு முதற்கட்டமாக கேரளாவில் தொடங்கியுள்ள நிலையில், அதற்காக நேற்று நடிகர் ரஜினிகாந்த் சென்னையில் இருந்து திருவனந்தபுரம் சென்றடைந்தார்.
தலைவர் 170 படத்தில் நடிகர்கள் அமிதாப் பச்சன், ராணா டகுபதி, பகத் பாசில், மஞ்சு வாரியார், ரித்திகா சிங், துஷாரா விஜயன், விஜய் டிவி ரக்சன் உட்பட பலரும் நடிக்கவுள்ளனர். இந்த தகவல் படக்குழு சார்பில் அதிகாரபூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கியுள்ளதாக அறிவித்துள்ள படக்குழு, பூஜை நிகழ்வு நடந்து படப்பிடிப்பு நடந்த புகைப்படத்தை எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் பகிர்ந்துள்ளது.
#Thalaivar170 🕴🏻 journey begins with an auspicious pooja ceremony 🪔🌸 today at Trivandrum 📍@rajinikanth @SrBachchan @tjgnan @anirudhofficial #FahadhFaasil @RanaDaggubati @ManjuWarrier4 @ritika_offl @officialdushara @srkathiir @GMSundar_ @RakshanVJ @KKadhirr_artdir @philoedit… pic.twitter.com/t5LHE6sgoA
— Lyca Productions (@LycaProductions) October 4, 2023