நடிகர் ரியாஸ் கானின் மருமகள் வளைகாப்பு; நேரில் வந்து வாழ்த்திய திரைபிரபலங்கள்.!
தேய்க்கத்தேய்க்க வரும் பாய்சன்.. ஆப்பிளில் இப்படியா? மக்களே உஷார்.!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் பகுதியில் வசித்து வரும் மக்கள், பழங்களில் மெழுகு பூசி விற்பனை செய்யப்படுவதாக உணவுப்பாதுகாப்புத்துறைக்கு புகார் வந்தது.
இந்த விசயம் குறித்து தகவல் அறிந்த அதிகாரிகள், ஓசூரில் உள்ள ராமநாயக்கனேரி பகுதியில் உள்ள 21 கடைகளில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, 11 கடைகளில் ஆப்பிள் உட்பட பழங்களில் மெழுகு பூசி விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது.
இதையும் படிங்க: 12 ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவிக்கு, தேர்வு அறையிலேயே பாலியல் தொல்லை; ஆசிரியர் அதிர்ச்சி செயல்.!
பொதுவாக ஒரு பழம் ஒரு வாரத்தில் கெட்டுபோயிடும். அதனை மாதக்கணக்கில் பாதுகாக்க வேண்டும் என மெழுகு பூசப்பட்டுள்ளது உறுதியானது. இதனால் அவ்வாறான பழங்களை அகற்றிய அதிகாரிகள், வியாபாரிகளுக்கு மெழுகு உட்பட பிற பூச்சு இல்லாத பொருட்களை வாங்கி விற்பனை செய்ய அறிவுறுத்தியுள்ளனர்.
ஆப்பிளில் மெழுகு பூச்சு தொடர்பான வீடியோ
“என்னங்க இது ஆப்பிள சொரண்டனா இப்படி ஆகுது..? இதிலும் கலப்படமா..? மக்களே உஷார்..! ” கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அதிரடி ஆய்வில் இறங்கிய உணவு பாதுகாப்பு அதிகாரிகள் விழிப்புணர்வு பேட்டி#Krishnagiri | #FoodSafety | #Apple | #Fruits | #PolimerNews pic.twitter.com/2Sxm0VoGAy
— Polimer News (@polimernews) March 22, 2025
ரூ.5000 அபராதம் தற்காலிகமாக விதிக்கப்பட்டுள்ள நிலையில், மேற்படி அவ்வாறான செயலை செய்யக்கூடாது. வியாபாரிகளாக இருந்தாலும், நீங்கள் வாங்கும் பொருட்களை சோதித்து வாங்கிவிட்டு, பின் விற்பனைக்கு கொண்டு வாருங்கள் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பல ஊர்களில் விற்பனை செய்யப்படும் ஆப்பிளின் நிலை இப்படி இருக்கிறது என்பதால், அதனை வாங்குவோர் தோல் பகுதியில் உள்ள ஆப்பிளை நீக்கி சாப்பிடுவது நல்லது. அல்லது இளம் சூடுள்ள நீரில் ஆப்பிளை கழுவி சுத்தம் செய்து பின் சாப்பிடலாம்.
வீடியோ நன்றிபாலிமர் தொலைக்காட்சி
இதையும் படிங்க: #Breaking: தேர்வு மைய அறையிலேயே 18 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை; ஆசிரியர் போக்ஸோவில் கைது.. கிருஷ்ணகிரியில் மீண்டும் அதிர்ச்சி.!