96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
அஜித்தின் வேட்டி கட்டு பாடலை அரசன் சோப்பு விளம்பரத்துடன் வச்சு செஞ்ச நெட்டிசன்கள்! வீடியோ!
தமிழ் சினிமாவில் விஜய் மற்றும் அஜித் இருவருக்கும் ஏகப்பட்ட ரசிகர்கள் உண்டு. அஜித் படம் வெளியாகப் போகிறது என்றால் விஜய் ரசிகர்கள் அஜித் படத்தை கலாய்ப்பதும், விஜய் படம் வெளியாகப் போகிறது என்றால் தல ரசிகர்கள் அதை கலாய்ப்பதும் வழக்கமான ஒன்றுதான்.
இந்நிலையில் சிவா இயக்கத்தில் தல அஜித் நடித்து வரும் விசுவாசம் படத்தின் வேட்டி கட்டு பாடல் நேற்று மாலை வெளியாகி அஜித் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. இந்நிலையில் வழக்கம் போல விஜய் ரசிகர்கள் வேட்டி கட்டு பாடலை கலாய்க்க ஆரம்பித்தனர். வேட்டி கட்டு பாடல் தல மற்றும் தளபதி ரசிகர்கள் இடையே விவாத பொருளாக மாறியது.
ஒரு கட்டத்தில் வேட்டி கட்டு பாடலை அரசன் சோப்பு விளம்பரமான வெளுத்து கட்டு, வெளுத்து கட்டு, வெளுத்து கட்டு பாடலுடன் ஒப்பிட்டு தளபதி ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர். இதோ அந்த வீடியோ.