குழந்தைகள் முன்னேற்ற கழகம் - படத்தின் ட்ரைலர் வெளியீடு.! லிங்க் உள்ளே.!
தளபதி 68... களம் இறங்கும் 90s'களின் ஃபேவரட் ஹீரோக்கள்... வெங்கட் பிரபுவின் மாஸ் பிளான்.!
லியோ திரைப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்த பின்னர் சிறிது ஓய்விற்கு பின் தனது 68-வது திரைப்படத்தில் களம் இறங்க தயாராக இருக்கிறார் தளபதி விஜய், இந்தத் திரைப்படத்திற்கான வேலைகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது.
தளபதி விஜயின் லியோ திரைப்படத்தை தொடர்ந்து அவரது 68-வது படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க வெங்கட் பிரபு இயக்குகிறார். இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ளார். 3டி மற்றும் விஎஃப்எக்ஸ் டெக்னாலஜியில் இந்த திரைப்படமானது தயாராக உள்ளது.
இதற்காக படக்குழுவினர் சமீபத்தில் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் நகருக்கு சென்று வந்துள்ளனர். சிம்புவிற்கு மாநாடு என்ற திரைப்படத்தின் மூலம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தவர் வெங்கட் பிரபு. அவரது அடுத்த திரைப்படமான கஸ்டடி தோல்வி அடைந்ததால் தளபதி 68 திரைப்படத்தை வெற்றி படமாக்க கடும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்.
இதன் ஒரு பகுதியாக தளபதி 68 திரைப்படத்தில் 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரிட் ஹீரோக்களான பிரசாந்த் மற்றும் பிரபுதேவா ஆகியோர் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. தளபதி நடித்த லியோ திரைப்படத்திலும் பல முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்திருந்தனர். இந்நிலையில் தளபதி 68 திரைப்படத்திலும் பிரசாந்த் மற்றும் பிரபுதேவா ஆகியோர் நடிக்க இருப்பதால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். இதனைப் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.