குழந்தைகள் முன்னேற்ற கழகம் - படத்தின் ட்ரைலர் வெளியீடு.! லிங்க் உள்ளே.!
எப்படியோ நல்லது நடந்தா சரி.! தனுஷ்- ஐஸ்வர்யா விவகாரத்தில் புதிய டுவிஸ்ட்.! தீயாய் பரவும் தகவல்!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யாவை கடந்த 2004-ம் ஆண்டு
திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு யாத்ரா, லிங்கா என இரண்டு மகன்கள் உள்ளனர். திருமணமாகி 18 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் பிரிய போவதாக அறிவித்தனர்.
இது ரசிகர்கள், திரையுலகப் பிரபலங்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் அவரவர் பணிகளில் கவனம் செலுத்தி வந்தனர். இந்த நிலையில் தற்போது அவர்கள் இருவரும் ரகசியமாக சந்தித்து இருப்பதாக இணையதளத்தில் தகவல் பரவி வருகிறது.
அதாவது தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் ஆர்.ஏ.புரம் பகுதியில் உள்ள பிளாட்டில் சந்தித்து வருவதாகவும் இந்த சந்திப்பின்போது அவர்கள் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக மீண்டும் சேர்ந்து வாழ்வதற்காக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இந்த சந்திப்பு குறித்து எந்தவித அதிகாரபூர்வமான இரு தரப்பிலிருந்தும் எந்த தகவலும் வெளியிடபடவில்லை. இந்நிலையில் ரசிகர்கள் எப்படியோ நல்லது நடந்தா சரி என கூறி வருகின்றனர்.