குடும்ப நிகழ்ச்சியில் செம ஹேப்பியாக நடிகர் தனுஷ்! யாரெல்லாம் இருக்காங்க பார்த்தீங்களா! வைரலாகும் புகைப்படம்!!



thanush-in-family-function-photo-viral

தமிழ் சினிமாவில் துள்ளுவதோ இளமை என்ற படத்தில் நடித்ததன் மூலம் ஹீரோவாக அவதாரமெடுத்து பின்னர் ஏராளமான படங்களில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து தற்போது டாப் நடிகராக வலம் வருபவர் தனுஷ். அவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி என சினிமா துறையையே கலக்கி வருகிறார். அவரது நடிப்பில் தற்போது மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் திருச்சிற்றம்பலம், தனது செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் போன்ற படங்கள் உருவாகியுள்ளது.

மேலும் தனுஷ் தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் 'வாத்தி' என்ற படத்தில் நடித்துள்ளார். அதுமட்டுமின்றி அவர் ஹாலிவுட்டில் ரூஸோ பிரதர்ஸ் இயக்கத்தில் நடித்துள்ள தி கிரே மேன் படம் ஓடிடியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.  இந்நிலையில் தனுஷ் தனது பிறந்தநாளை மிகவும் கோலாகலமாக கொண்டாடியுள்ளார்.

thanush

இந்தநிலையில் சில மாதங்களுக்கு முன்பு தனது மனைவி ஐஸ்வர்யாவை விவாகரத்து செய்த நிலையில் அண்மையில் அவர் குடும்ப நிகழ்ச்சி ஒன்றில் தனது மகன்களுடன் கலந்து கொண்டுள்ளார். அதில் அவரது அண்ணன் செல்வராகவன் குடும்பத்தினர், பெற்றோர் உள்ளிட்ட கலந்து கொண்டுள்ளனர். இந்தப் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.