குழந்தைகள் முன்னேற்ற கழகம் - படத்தின் ட்ரைலர் வெளியீடு.! லிங்க் உள்ளே.!
என் தலைவர் விருது பெற்ற அதே மேடையில்.. செம குஷியாக தனுஷ் வெளியிட்ட புகைப்படம்! குவியும் வாழ்த்துக்கள்!!
ஒவ்வொரு ஆண்டும் திரைத்துறையில் சிறந்து விளங்கி தங்களது பங்களிப்பை அளித்துவரும் கலைஞர்களை அங்கீகரித்து அவர்களை பெருமைப்படுத்தும் விதமாக மத்திய அரசால் தேசிய விருதுகள் வழங்கப்படும். அந்தவகையில், 2019-ஆம் ஆண்டுக்கான விருதுகள் கடந்த மார்ச் மாதம் அறிவிக்கப்பட்டது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக விருது வழங்கும் விழா தள்ளிவைக்கப்பட்டது.
இந்த நிலையில் நேற்று 67வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா
விமரிசையாக நடைபெற்றது. இதில்
ரஜினிகாந்த், தனுஷ், விஜய் சேதுபதி ஆகியோர் கலந்துகொண்டனர். இந்நிலையில் 45 ஆண்டுகளுக்கு மேலாக சினிமாவில் இருக்கும் ரஜினியின் பங்களிப்பை கவுரவிக்கும் வகையில் ரஜினிகாந்திற்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது. மேலும் அசுரன் படத்திற்காக தனுஷிற்கு சிறந்த நடிகருக்கான விருது மற்றும் விஜய் சேதுபதிக்கு சிறந்த துணை நடிகருக்கான விருதும் வழங்கப்பட்டது.
இந்த நிலையில் தனுஷ், விருதுடன் தனது மாமனார் ரஜினியுடன் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு, என் தலைவர் தாதா சாகேப் பால்கே விருது வென்ற அதே மேடையில், சிறந்த நடிகருக்கான தேசிய விருதை நான் வென்றது விவரிக்க முடியாதது என்று கூறி அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.