குழந்தைகள் முன்னேற்ற கழகம் - படத்தின் ட்ரைலர் வெளியீடு.! லிங்க் உள்ளே.!
பிரமாண்டமாக நடக்கும் தர்பார் இசைவெளியீட்டு விழா! தொகுத்து வழக்கப்போவது இவரா? அவரே கூறிய தகவல்!
பேட்ட படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த் தற்போது AR முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படத்தில் நடித்துவருகிறார். மேலும் அப்படத்தில் போலீஸ் ஐ.பி.எஸ். அதிகாரியாக நடிக்கும் ரஜினிக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்துவருகிறார். மேலும் இப்படத்தில் நிவேதா தாமஸ் மற்றும் சுனில் ஷெட்டி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.
லைகா புரொடக்ஷன் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்நிலையில் இதன் படபிடிப்பு வேலைகள் முடிவடைந்த நிலையில் படம் வெளியாவதற்கான பின்னணி வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் படம் வரும் பொங்கலுக்கு ரிலீசாகஉள்ளது.
இந்நிலையில் இசை வெளியீட்டு விழா தற்போது டிசம்பர் 7ம் தேதியான இன்று சென்னை நேரு உள்ளரங்கத்தில் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளதாக படக்குழுவினர் அறிவித்திருந்தனர். இந்த பிரம்மாண்ட விழாவை தான் தொகுத்து வழங்க இருப்பதாக தொகுப்பாளினி ரம்யா தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.
😇🙏🏻🤙🏻 pic.twitter.com/vdOm3YYe43
— Ramya Subramanian (@actorramya) December 7, 2019