குழந்தைகள் முன்னேற்ற கழகம் - படத்தின் ட்ரைலர் வெளியீடு.! லிங்க் உள்ளே.!
செம்ம மாஸாக அனிருத் இசையில் வெளியான தர்பார் படத்தின் சும்மா கிழி பாடல்! இதோ.
தல அஜித்தை வைத்து தீனா படத்தை இயக்கியதன் மூலம் இயக்குனராக அறிமுகமானார் ஏ. ஆர். முருகதாஸ். அதனை தொடர்ந்து ரமணா, கஜினி, தூப்பாக்கி போன்ற பல வெற்றி படங்களை இயக்கியுள்ளார். மேலும் இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி போன்ற மொழி படங்களையும் இயக்கியுள்ளார்.
தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து தர்பார் படத்தை இயக்கியுள்ளார். இப்படம் வரும் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. இப்படத்தின் பாதி படப்பிடிப்பானது மும்பையில் படமாக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் வருகைக்காக சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.
மேலும் இப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் தற்போது அனிருத்தின் அதிரடியான இசையில் தர்பார் படத்தின் சும்மா கிழி பாடல் வெளியாகியுள்ளது.