குழந்தைகள் முன்னேற்ற கழகம் - படத்தின் ட்ரைலர் வெளியீடு.! லிங்க் உள்ளே.!
செம மாஸாக தீம் மியூசிக்குடன் வெளியான தர்பார் படத்தின் மோஷன் போஸ்டர்!வீடியோ உள்ளே.
இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான பேட்ட படத்தின் வெற்றியை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தர்பார் படத்தில் நடித்து வருகிறார். மும்பை போலீசாக ரஜினி நடிக்கும் இந்த படத்தினை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார்.
மும்மையில் படப்பிடிப்பு நடந்து வரும் இந்த தர்பார் படம் 2020 பொங்கலுக்கு ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலை ஏற்படுத்தி வருகின்றனர்.
மேலும் சில தினங்களுக்கு முன்பு இப்படத்தின் HD புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலை ஏற்படுத்தின. இந்நிலையில் தற்போது யூடியூபில் தர்பார் படத்தின் தீம் மியூசிக்குடன் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது. தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகின்றது.