நடிகர் விஷாலுக்கு என்னதான் ஆச்சு? வெளியானது மருத்துவ அறிக்கை.! விபரம் உள்ளே.!
லியோ திரைப்படத்தை விமர்சனம் செய்த பிரபலம்.! கொந்தளித்த விஜய் ரசிகர்கள்.!
தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக இருந்து வருபவர் தான் கீர்த்தி சுரேஷ் இவருடைய தந்தையான சுரேஷ் மலையாளத்தில் பிரபல தயாரிப்பாளராக இருந்து வருகிறார். இவர் பல்வேறு திரைப்படங்களை தயாரித்திருக்கிறார். அண்மையில் கேரள மாநிலத்தில் நடந்த சர்வதேச புத்தக விழா ஒன்றில் பேசிய அவர், மலையாளத்தில் மம்முட்டி நடித்த 'ரோமாஞ்சனம்' மற்றும் தமிழில் விஜய் நடித்து வெற்றி பெற்ற 'லியோ' படங்களைப் பற்றி இளம் சினிமா ரசிகர்களிடம் பேசியபோது. "உங்களின் மைன்ட் செட் மாறிவிட்டது. நீங்கள் லோகேஷ் கனகராஜையும், நெல்சனையும் பாலோ செய்கிறீர்கள்.
ரோமாஞ்சனம்' சினிமாவும் எனக்கு சிறந்த படமாக தோணவில்லை. அந்தப் படம் மோசமான படம் என நான் சொல்லவில்லை, ஆனால், எனக்குப் பிடிக்கவில்லை. அதெல்லாம் உங்களுக்குப் பிடிக்கும். நான் ஒரு பழைய ஆள்.இப்போது யாராவது என்னிடம் வந்து கதை சொன்னாலும் அது எனக்கு குழப்பமாக இருக்கும். எனது மகளைக் கேட்கச் சொல்வேன். இங்கு தமிழ் சினிமாவுக்கு நிறைய ரசிகர்கள் உள்ளார்கள். சமீபத்தில் 'லியோ' படம் பார்த்தேன்.
அது எனக்கு பெரிய படமாகத் தோன்றவில்லை. கிளைமாக்ஸ்ல 200 பேரை ஹீரோ அடிக்கிற சம்பவத்தை சூப்பர் மேன் தான் பண்ண முடியும். ஆனால், அது உங்களுக்குப் பிடிச்சிருக்கு," என தெரிவித்திருந்தார்.இந்த நிலையில் தான், அவர் லியோ திரைப்படத்தை எப்படி குறை சொல்லலாம்? என்று விஜய்யின் ரசிகர்கள் பலர் கடுமையாக அவர் மீது விமர்சனத்தை முன் வைத்தனர்.
தளபதி விஜயுடன் பைரவா, சர்க்கார் உள்ளிட்ட திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்த கீர்த்தி சுரேஷின் தந்தை இப்படி பேசியிருப்பது விஜயின் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. லியோ திரைப்படத்தையே இப்படி விமர்சனம் செய்திருக்கிறாரே, அவருடைய மகள் நடித்த பைரவா திரைப்படத்தை அவர் பார்க்கவில்லையா? என்ற கேள்வியையும் அவர்கள் கேட்டிருக்கிறார்கள்.