குழந்தைகள் முன்னேற்ற கழகம் - படத்தின் ட்ரைலர் வெளியீடு.! லிங்க் உள்ளே.!
நடிகர் சுஷாந்தை தொடர்ந்து மற்றொரு தோனி பட நடிகர் தற்கொலை! இறப்பதற்கு முன் இறுதியாக வெளியிட்ட வீடியோவால் அதிர்ச்சி!!
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தல எம். எஸ் தோனியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்த சுஷாந்த் சிங் ராஜ்புட் கடந்த ஆண்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் மன அழுத்தத்தால் அவர் தற்கொலை செய்துகொண்டார் என கூறப்பட்டது. அவரது தற்கொலை குறித்து தற்போது வரை வழக்கு நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் தோனி படத்தில் நடித்த மற்றொரு நடிகர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது தோனியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்த மற்றொரு நடிகர் மகாராஷ்டிரா மாநிலம் மும்பை கோரேகாவ்ன் பகுதியைச் சேர்ந்த சந்தீப் நஹார். இவர் நேற்று தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் தற்கொலை செய்துகொள்வதற்கு முன் சந்தீப் தனது பேஸ்புக் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் என் மனைவி காஞ்சன் மற்றும் மாமியார் தன்னை தொடர்ந்து டார்ச்சர் செய்து மிரட்டுகின்றனர். மனைவி எப்போது பார்த்தாலும் சண்டை போட்டுக் கொண்டே இருக்கிறார். அதனால் எனக்கு வாழவே பிடிக்கவில்லை. இந்த வாழ்க்கை மிகவும் நரகமாக இருக்கிறது. அதனால் தற்கொலை செய்து கொள்ளலாம் என நினைத்ததுண்டு. என் முடிவுக்கு யாரும் பொறுப்பு கிடையாது என பேசியுள்ளார். சந்தீப் நஹரின் தற்கொலை ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.