வெறித்தனமாக வெளியான துணிவு சில்லா சில்லா பாடல்... கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!! வீடியோ இதோ...



 Thuniv single song chilla chilla video

நேர் கொண்ட பார்வை, வலிமை படத்தை தொடர்ந்து எச்‌. வினோத் இயக்கத்தில் மூன்றாவது முறையாக துணிவு என்ற படத்தில் நடிகர் அஜித் குமார் நடித்துள்ளார். இந்த படத்தையும் போனி கபூரே தயாரித்துள்ளார். பஞ்சாப்பில் நடைப்பெற்ற வங்கி கொள்ளையை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக மலையாள நடிகை மஞ்சு வாரியர் நடித்துள்ளார். இப்படம் வருகின்ற ஜனவரி மாதம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்தின் வருகைக்காக ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் தற்போது துணிவு படத்தின் முதல் சிங்கிள் பாடலான சில்லா சில்லா பாடல் வெளியாகியுள்ளது. அனிருத் வாய்ஸில் ஜிப்ரான் இசையமைப்பில் செம மாஸாக வெளியான இப்பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.