கட்சி துவங்கியது முதல், எங்கே சென்றாலும் அதை செய்யும் விஜய்.! ஆச்சரியத்தில் தொண்டர்கள்.!
குளிர்காலத்தில், இந்த உணவை எல்லாம் தொட்டுக் கூட பார்க்கக் கூடாது.! மறந்து கூட இந்த உணவுகளை சாப்பிடாதீர்கள்..!
குளிர்காலத்தில் சூடாகவும், சுவையாகவும் எதாவது தின்பண்டங்கள் மற்றும் பானங்கள் செய்து சாப்பிடுவது நம்மில் பலருக்கும் பிடிக்கும். இவ்வாறு குளிருக்கு இதமாக நாம் சாப்பிடும் ஒரு சில உணவுகளினால் சில உடல் பாதிப்புகள் ஏற்படுகிறது. அப்படி, என்ன என்ன உணவுகளை தவிர்க்க வேண்டும் என இந்த பதிவில் பார்ப்போம்.
குளிர்காலத்தில் தவிர்க்க வேண்டிய உணவுகள்
பொரித்த உணவுகள்
குளிருக்கு சூடாக பஜ்ஜி, பக்கோடா செய்து சாப்பிடுவது சுவையாக இருந்தாலும் இது மோசமான உடல்பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. இவ்வாறு, பொரித்த உணவுகளை சாப்பிடுவதால் செரிமானக் கோளாறுகளை ஏற்படுத்துகிறது. மேலும், உடலில் கெட்ட கொழுப்பை அதிகரித்து உடல் பருமனுக்கு காரணமாகிறது.
இதையும் படிங்க: குளிருக்கு பயந்து இப்படி மட்டும் தூங்காதீர்கள்..! பெரும் ஆபத்தை சந்திக்கலாம்.!
பால் பொருட்கள்
குளிருக்கு இதமாக தேநீர் அல்லது காபி குடிப்பதை நம்மில் பலர் பழக்கமாக கொண்டு ஒரு நாளைக்கு 3 முறைக்கு மேல் தேநீர் குடிக்கிறோம். இவ்வாறு குளிர்காலத்தில் தேநீர் அல்லது காபி குடிப்பது நல்லதல்ல. இதனால் சளி பிரச்சனை அதிகரிக்கும். மேலும், செரிமான பிரச்சனையை ஏற்படுத்தும். ஆகையால் இந்த குளிர்காலங்களில் பால் சம்பந்தப்பட்ட மோர், தயிர் மற்றும் பால் கொண்டு தயாரிக்கப்படும் பானங்கள் ஆகியவற்றை தவிர்ப்பது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. பால் குடிக்க வேண்டுமென்றால் சிறிது மஞ்சள் தூள் கலந்து குடிப்பது நல்லது. மற்றபடி தேநீர் அல்லது காபியை ஒரு முறைக்கு மேல் குடிப்பது நல்லதல்ல.
ஐஸ்கிரீம் மற்றும் குளிர்பானங்கள்
குளிர்காலங்களில் ஐஸ்கிரீம் மற்றும் குளிர்பானங்கள் குடிப்பதை தவிர்க்க வேண்டும். பழச்சாறுடன் சர்க்கரை சேர்த்து குடிப்பதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு அதிக அளவு சர்க்கரை உள்ள பானங்களை குடிப்பதால் உடலில் இன்சுலின் எதிர்ப்பை வளர்த்து, அதன் விளைவாக நோய் எதிர்ப்பு சக்தி குறைய வாய்ப்பு உள்ளது. மேலும், பழங்களை சாறு எடுத்து குடிக்காமல் அப்படியே சாப்பிடுவது நல்லது.
இறைச்சி
குளிர்காலத்தில் இறைச்சி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். குளிர்காலங்களில் உடல் செயல்பாடுகள் குறைந்து இருக்கும் நிலையில் இறைச்சி சாப்பிடுவது செரிமான சம்மந்தப்பட்ட பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
இனிப்பு வகை
இனிப்பு வகைகளை குளிர்காலங்களில் சாப்பிடுவது நல்லதல்ல. சர்க்கரை அளவு ஆற்றலை செயலிழக்க செய்ய வாய்ப்பு உள்ளது. ஆகையால், ஸ்வீட், கேக் போன்றவற்றை சாப்பிடாமல் இருப்பது நல்லது. இதற்கு மாறாக தேன் சேர்த்து கொள்ளலாம்.
சாலட் வகைகள்
சாலட் வகைகளை குளிர்காலங்களில் தவிர்ப்பது நல்லது. குளிர்ந்த உணவு வகைகளால் வயிற்றில் அமிலத்தன்மை ஏற்படும். இதனால், வயிறு உப்புசம் அதிகரித்து வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் வரும். தினசரி சாலட் சாப்பிடும் பழக்கம் உள்ளவர்கள் மதிய உணவுக்கு முன்னர் எடுத்துக் கொள்ளலாம். இதற்கு மாறாக காய்கறி சூப் எடுத்துக் கொண்டால் மிகவும் நல்லது.
இதையும் படிங்க: இரவு நீண்ட நேரம் விழித்திருப்பவரா நீங்கள்.?! உஷார்.. இது உங்களுக்கு தான்.!