மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கொண்டாட ரெடியாகுங்க.. தளபதி பிறந்தநாளில் ரசிகர்களுக்கு காத்திருக்கும் செம ட்ரீட்.! சூப்பர் நியூஸ்!!
தமிழ் சினிமாவில் ஏராளமான மாஸ், சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக, தளபதியாக ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருப்பவர் நடிகர் விஜய். இவருக்கென உலகம் முழுதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. தளபதி விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
அரசியலில் தளபதி
சினிமா துறையை தன் வசப்படுத்தியுள்ள விஜய் தற்போது அரசியலிலும் களமிறங்கியுள்ளார். அவர் சில மாதங்களுக்கு முன்பு தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கினார். மேலும் 2025இல் நடைபெறவுள்ள தமிழக சட்டபேரவை தேர்தலில் தனது தமிழக வெற்றிக் கழகம் போட்டியிடும் எனவும், அதற்கு முன்னர் தான் ஏற்கனவே ஒப்பந்தமான படங்களில் நடித்து முடித்துவிட்டு முழு நேர அரசியலில் ஈடுபடவுள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
இதையும் படிங்க: அதனால் எனது பிறந்தநாள் கொண்டாட்டம் இல்லை.! இசைஞானி இளையராஜா உருக்கம்!!
ரீ- ரிலீசாகும் திரைப்படம்
இந்த நிலையில் விஜய் மற்றும் திரிஷா இணைந்து நடித்த கில்லி திரைப்படம் ரீ- ரிலீசாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று மீண்டும் வசூலை அள்ளியது. இந்த நிலையில் ஜூன் 22-ஆம் தேதி விஜய் தனது பிறந்தநாளை கொண்டாட உள்ளார். அதனை முன்னிட்டு விஜய் மற்றும் ஏ.ஆர் முருகதாஸ் கூட்டணியில் உருவாகி பெரும் வெற்றியை பெற்ற துப்பாக்கி திரைப்படம் திரையரங்குகளில் ரீ-ரிலீசாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதனால் ரசிகர்கள் பெரும் உற்சாகம் அடைந்துள்ளனர்.
இதையும் படிங்க: ரவுடி பேபி சாய் பல்லவியின் பிறந்தநாள்.! தண்டேல் படக்குழு கொடுத்த வேற லெவல் கிப்ட்.! என்ன பார்த்தீங்களா!!