குழந்தைகள் முன்னேற்ற கழகம் - படத்தின் ட்ரைலர் வெளியீடு.! லிங்க் உள்ளே.!
ஏகப்பட்ட அவமானங்கள்! தற்கொலை வரை சென்ற ஜிபி முத்து.! தற்போது அவருக்கு கிடைத்த அதிர்ஷ்டத்தை பார்த்தீங்களா.!
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியை சேர்ந்தவர் டிக்டாக் பிரபலம் ஜி.பி.முத்து. தனது நெல்லை பேச்சாலும், நையாண்டியான எதார்த்தமான டிக்டாக் வீடியோக்களாலும் பலரையும் ரசிக்க வைத்த இவருக்கென தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.
இவரை டிக்டாக்கில் அதிகப்படியான ரசிகர்கள் பின்தொடர்ந்தனர். இந்நிலையில் டிக் டாக் தடை செய்யப்பட்டபோது அவர் பெருமளவில் வருந்தினார்.
ஆனாலும் அத்துடன் நிறுத்திக் கொள்ளாமல் இன்ஸ்டாகிராம், யூடியூப் போன்றவற்றில் தொடர்ந்து வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். கடுகு தாளிப்பது, தனக்கு வரும் லெட்டர்களை படித்து அதற்கு பதிலளிப்பது என தொடர்ந்து நாள்தோறும் நான் செய்யும் விஷயங்களையே வீடியோவாக வெளியிட்டு வருகிறார். இவரது யூடுயூப் சேனலை 3லட்சத்திற்கும் அதிகமானோர் பின் தொடர்ந்து வருகிறார்கள்.
இப்படியொரு நிலையில் ஜி பி முத்து Second hand கார் ஒன்றை தற்போது வாங்கியுள்ளார். இதுகுறித்து பேசியுள்ள அவர், என் பரம்பரையிலேயே முதல் கார் இதுதான் என்று கண்ணீருடன் தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்நிலையில் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
ஜிபி முத்துவின் வீடியோவிற்கு ஏராளமான மோசமான கமெண்டுகள், விமர்சனங்கள் வரும். மேலும் வாழ்க்கையில் ஏராளமான கஷ்டங்களை சந்தித்தவர். சில மாதங்களுக்கு முன்பு கூட தற்கொலை முயற்சி செய்துள்ளார்.