96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
டிக்டாக் பிரபலம் ஜி.பி முத்து திடீர் தற்கொலை முயற்சி! இதுதான் காரணமா? வெளியான அதிர்ச்சி தகவல்!
டிக்டாக் பிரபலம் ஜி.பி.முத்து தற்கொலை முயற்சி செய்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரிடமும் பெரும் வரவேற்பை பெற்ற பொழுதுபோக்கு செயலி டிக்டாக். இதில் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி பலரும் ஏராளமான வீடியோக்களை வெளியிட்டு வந்தனர்.
டிக் டாக் செயலி:
இவ்வாறு வித்தியாசமான பல வீடியோக்களை வெளியிட்டு மக்கள் மத்தியில் பிரபலமானவர்கள் ஏராளம். மேலும் அவர்கள் நாள்தோறும் தவறாமல் வீடியோ வெளியிடுவதையே முழுநேர வேலையாகவும் வைத்திருந்தனர். இந்த நிலையில் டிக்டாக் உள்ளிட்ட 59 சீன ஆப்களுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு தடை விதிக்கப்பட்டது. இதனால் பலரும் பெரும் வருத்தம் அடைந்தனர்.
ஜி.பி முத்து தற்கொலை முயற்சி:
இவ்வாறு டிக்டாக் செயலியில் ஏராளமான வீடியோக்களை வெளியிட்டு மக்களிடையே பிரபலமானவர் திருச்செந்தூர் உடன்குடியைச் சேர்ந்த ஜி.பி.முத்து. இவர் எதார்த்தமான நகைச்சுவையான பேச்சால் மக்களை பெருமளவில் ஈர்த்தார். இந்நிலையில் சிலகாலமாகவே வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த ஜி.பி.முத்து தற்போது தற்கொலை முயற்சி செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனைக் கேட்டு அவரது ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.