96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
டிக்டாக் ரவுடி பேபி சூர்யா தற்கொலை முயற்சி! மருத்துவமனையில் சிகிச்சை!
டிக்டாக்கில் சூர்யா என்ற பெயரில் ஏராளமான வீடியோக்களை வெளியிட்டு பிரபலமானவர் சுப்புலட்சுமி. திருப்பூரை சேர்ந்த இவர் அரைகுறை ஆடைகள் மற்றும் ஆபாசமான பேச்சுக்களுடன் வீடியோ வெளியிட்டு வைரலாகி பிரபலமடைந்தார். இந்நிலையில் இவர் சமீபத்தில் சிங்கப்பூர் சென்றிருந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது இதனால் அங்கேயே தங்கிய சூர்யா
சிறப்பு விமானத்தின் மூலம் கடந்த 16ஆம் தேதி தமிழகத்திற்கு வந்து, திருப்பூரில் உள்ள அவரது வீட்டிற்கு சென்றுள்ளார்.
இந்நிலையில் அக்கம்பக்கத்தில் வசிப்பவர்கள் கொரோனா அச்சத்தின் காரணமாக இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் அங்கு விரைந்த போலீசார் ஆம்புலன்ஸ் மூலம் சூர்யாவை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல முயற்சி செய்துள்ளனர். ஆனால் அவர் நான் கோவையில் கொரோனா பரிசோதனை மேற்கொண்டு விட்டேன். அங்கு பாதிப்பில்லை என உறுதி செய்யப்பட்ட பின்னரே நான் வந்தேன் என கூறியுள்ளார்.
மேலும் நான் ஆம்புலன்சில் வரமாட்டேன் எனது டூவீலரில் வருகிறேன், சிங்கப்பூரில் ஏசியில் இருந்துவிட்டேன் தமிழகத்தில் அடிக்கும் வெயிலில் எனக்கு கொரோனா பரவிவிடுமோ என பயமாக உள்ளது. எனக்கு மருத்துவமனையில் தனி ரூம், தனி சாப்பாடு வேண்டும். அங்கு என்னால் பாத்ரூம் கூட போக முடியாது என கலாட்டா செய்துள்ளார்.
மேலும் செய்தியாளர் ஒருவரை மிரட்டி அவதூறு பரப்பி, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து அவர்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், இன்று காலை தனது வீட்டில் சூர்யா தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மேலும் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.