மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"அன்பு, தியாகம், அர்ப்பணிப்பு, ஒற்றுமை" - பக்ரீத் பண்டிகைக்கு த.வெ.க தலைவர் விஜய் வாழ்த்து.!
இஸ்லாமியர்கள் பெருவாரியாக சிறப்பிக்கும் பக்ரீத் தியாகத் திருநாள், ஜூன் 17ம் தேதியான இன்று சிறப்பிக்கப்பட்டது. இன்றைய நாளில் இஸ்லாமியர்கள் புத்தாடை உடுத்தி, அசைவ உணவுகளை சமைத்து உற்றார்-உறவினர்கள், நண்பர்களுக்கு வழங்கி மகிழுவார்கள். உலகளவில் தியாகத் திருநாளை சிறப்பிக்கும் இஸ்லாமியர்களுக்கு பல தலைவர்களும் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர். இந்நிலையில், நடிகர் மற்றும் தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய், தியாகத் திருநாளுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறார்.
விஜய் வாழ்த்துப்பதிவு
இதுகுறித்த விஜயின் பதிவில், "அன்பு, தியாகம், அர்ப்பணிப்பு, ஒற்றுமை ஆகிய நற்குணங்களை எடுத்துரைக்கும் வகையில் உலகெங்கும் உள்ள இசுலாமிய சகோதர சகோதரிகளால் பக்ரீத் பண்டிகை, தியாகத் திருநாளாகக் கொண்டாடப்படுகிறது. இந்த நன்னாளில் இசுலாமிய சொந்தங்கள் அனைவருக்கும் என் இனிய பக்ரீத் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்" என கூறியுள்ளார்.
இதையும் படிங்க: நடிகர் விஜய், தனுஷ், திரிஷாவிற்கு மருத்துவ பரிசோதனை செய்யுங்க.. பாடகி சுசித்ரா விவகாரம்.! சீறிய வீரலட்சுமி!!
அன்பு, தியாகம், அர்ப்பணிப்பு, ஒற்றுமை ஆகிய நற்குணங்களை எடுத்துரைக்கும் வகையில் உலகெங்கும் உள்ள இசுலாமிய சகோதர சகோதரிகளால் பக்ரீத் பண்டிகை, தியாகத் திருநாளாகக் கொண்டாடப்படுகிறது. இந்த நன்னாளில் இசுலாமிய சொந்தங்கள் அனைவருக்கும் என் இனிய பக்ரீத் நல்வாழ்த்துகளைத்…
— TVK Vijay (@tvkvijayhq) June 17, 2024
இதையும் படிங்க: எல்லாம் முடிந்துவிட்டது.! புகைப்படத்துடன் இயக்குனர் வெங்கட் பிரபு வெளியிட்ட அப்டேட்!!