நடிகர் விஷாலுக்கு என்னதான் ஆச்சு? வெளியானது மருத்துவ அறிக்கை.! விபரம் உள்ளே.!
அடப்பாவமே...மகான் படத்தில் நடித்த நடிகை வாணி போஜனுக்கு ஏற்பட்ட சோகம்... கடைசியில் இப்படி ஆச்சே.!
தமிழில் ஆதித்யா வர்மா என்ற படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம். அவரின் முதல் படமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தந்தது. அதனையடுத்து துருவ் எப்போது தனது தந்தையுடன் நடிக்கவுள்ளார் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வந்தனர்.
அதற்கேற்ப துருவ்வும், விக்ரமும் இணைந்து தற்போது இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள மகான் படத்தில் நடித்துள்ளனர்.இப்படம் இன்று பிரம்மாண்டமாக வெளியாகியுள்ளது.
இந்நிலையில் மகான் படம் குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது மகான் படத்தில் நாயகிகளாக நடித்த வாணி போஜன் மற்றும் ஸ்ருஷ்டி டாங்கே காட்சிகள் எதுவும் வரவில்லையாம். படத்தின் நீளம் காரணமாக அவர்களது காட்சியை நீக்கிவிட்டார்களாம். இந்நிகழ்வு ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.