குழந்தைகள் முன்னேற்ற கழகம் - படத்தின் ட்ரைலர் வெளியீடு.! லிங்க் உள்ளே.!
அட.. மூன்று பேரும் வேற லெவல்! மறுபடியும் சேர்ந்தா நல்லாருக்குமே! நீண்ட நாட்களுக்கு பிறகு வனிதா வெளியிட்ட புகைப்படம்!!
தமிழ் சினிமாவில் சந்திரலேகா என்ற படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை வனிதா. அதனை தொடர்ந்து அவர் ஒரு சில படங்களிலேயே நடித்துள்ளார். ஆனால் குடும்பத்தினருடன் தகராறு ஏற்பட்டு பல சர்ச்சைகளை சந்தித்து மக்கள் மத்தியில் பிரபலமானார். மேலும் வனிதா விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தனது சில எடக்குமடக்கான செயல்களால் ரசிகர்களின் விமர்சனத்திற்கு உள்ளானார்.
அதனைத் தொடர்ந்து அவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டு வெற்றியாளரானார். பின்னர் பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட வனிதா அடுத்தடுத்து மூன்றாவது திருமணம், விவாகரத்து என தொடர்ந்து பல சர்ச்சைகளை சந்தித்தார். ஆனாலும் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் வனிதா அடுத்தடுத்து படங்களில் செம பிஸியாக உள்ளார்.
வனிதா சமூக வலைத்தளங்களில் பிஸியாக இருக்கக்கூடியவர். அவர் அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் சமையல் வீடியோக்களை அவ்வப்போது வெளியிட்டு வருவார். இந்நிலையில் வனிதா தற்போது எனது தங்கைகளின் புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார். இதை கண்ட ரசிகர்கள் கழிச்சுவிட்டது கழிச்சு விட்டதுதான். உங்களை அவங்க கணக்கிலயே எடுக்க மாட்டாங்க என கூறியுள்ளார். மேலும் சிலர் நீங்கள் மீண்டும் குடும்பத்துடன் சேர்ந்து வாழ்ந்தால் நன்றாக இருக்கும் என கூறி வருகின்றனர்.