அட.. நடிகை வரலக்ஷ்மி சரத்குமாரா இது..? பயங்கர ஒல்லியா மாறிட்டாரே.. வைரலாகும் புகைப்படம்..



Varalakshmi sarathkumar slim look photos goes viral

நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் உடல் எடையை குறைத்து பயங்கர ஸ்லிம்மாக மாறியுள்ள புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் வரலக்ஷ்மி சரத்குமார். பிரபல தமிழ் நடிகர் சரத்குமாரின் மகளான இவர் போடா போடி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானார். அதனை தொடர்ந்து பல்வேறு படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் வரலக்ஷ்மி.

varalakshmi

ஆட்டம், பாட்டம், கவர்ச்சி மட்டும் இல்லாமல் கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை தேர்வு செய்து நடித்துவரும் இவர் அடுத்ததாக பம்பன், சேசிங், கலர்ஸ் உள்ளிட்ட படங்களில் நடித்துவருகிறார்.

இந்நிலையில் திரையில் அறிமுகமான காலத்தில் இருந்து சற்று உடல் எடை அதிகமாகவே இருந்துவந்த வரலக்ஷ்மி தற்போது தனது உடல் எடையை குறைத்து பயங்கர ஸ்லிம்மாக மாறியுள்ளார். அவரது சமீபத்திய புகைப்படங்கள் சில இணையதளத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது.

varalakshmi