96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
பயங்கர மாடர்னாக மாறிய வெய்யில் பட நடிகை! அவரா இது? லேட்டஸ்ட் புகைப்படம் இதோ!
இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தில், நடிகர் பரத், பாவனா நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படம் வெயில். வித்தியாசமான கதைக்களம் கொண்ட இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றி பெற்றது.
இந்த படத்தில் நடிகர் பசுபதிக்கு ஜோடியாக முக்கிய வேடத்தில் நடித்தவர் நடிகை பிரியங்கா நாயர். மலையாள நடிகையான இவர் வெயில் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். வெயில் படத்தை அடுத்து தொலைபேசி, செங்காத்து பூமியிலே என ஒருசில படங்களில் நடித்தார்.
ஆனால், வெயில் படத்தை அடுத்து இவர் நடித்த எந்த படங்களும் இவருக்கு சரியாக கைகொடுக்காத நிலையில் கடந்த 2012 ல் லாரன்ஸ் ராம் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஆனால், கணவன் மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டில் கடந்த 2015 ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்றனர்.
இந்நிலையில் நீண்ட காலத்துக்கு பின் மீண்டும் சினிமாவில் நடிக்க வந்துள்ளார் பிரியங்கா. வெயில் படத்தில் பார்ப்பதற்கு அச்சு அசல் கிராமத்து பெண் போல இருந்த இவர் தற்போது பயங்கர மாடர்னாக மாறியுள்ளார். அல்டரா மாடர்ன் தோற்றத்தில் இருக்கும் இவரது சமீபத்திய புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்.