மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அப்படினா அவங்க எங்கே வாழ்ந்துகிட்டு இருக்காங்க.. இயக்குனர் பிரவீன் காந்தி கருத்துக்கு வெற்றிமாறன் பதிலடி!!
நடிகர் ரஞ்சித் நடித்து இயக்கியுள்ள ‘குழந்தை c/o கவுண்டம்பாளையம்’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றுள்ளது. அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இயக்குனர் பிரவீன் காந்தி பேசுகையில்," பா.ரஞ்சித், வெற்றிமாறன் உள்ளிட்ட சில டைரக்டர்கள் வளர்ச்சி கண்ட பிறகுதான் சினிமா தளர்ச்சி ஆகிவிட்டது. சினிமாவில் சாதியை சொல்லவே கூடாது. சாதியைப் பற்றி பேசுபவர்களை ஒதுக்க வேண்டும்" என்று கூறியிருந்தார்.
வெற்றிமாறன் பதிலடி
இந்நிலையில், இயக்குநர் அமீர் நடிப்பில் வெளிவந்துள்ள உயிர் தமிழுக்கு திரைப்படம் நெல்லை பாளையங்கோட்டையில் இன்று திரையிடப்பட்டது. இதனை காண இயக்குநர் வெற்றிமாறன் அங்கு சென்றிருந்தார். தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவரிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், இன்று இந்தியாவில் சாதிய ரீதியிலான அடக்குமுறை இல்லை என சொல்கிறார்கள், சமூக ஏற்ற தாழ்வு இல்லை என சொல்கிறார்கள் என்றால் அவர்கள் எங்கு வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள்னு தெரியலை.
இதையும் படிங்க: சூரி ஹீரோவாக நடிக்கும் 3வது படம்... வெற்றிமாறன் உதவி இயக்குனருடன் கைகோர்த்த சூரி... படப்பிடிப்பு பூஜையுடன் தொடக்கம்.!
தமிழகத்தில் சாதி ஏற்றதாழ்வு
இந்தியா முழுவதும் சமூக ஏற்ற தாழ்வுகள் இருந்து கொண்டுதான் உள்ளது. தமிழகத்திலும் இன்றும் நிறைய சம்பவங்கள் கண்முன்னே நடக்கிறதுதானே.. பல்வேறு சம்பவங்களை அதற்கு உதாரணமாக சொல்லலாம் எனக் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: முன்னணி இயக்குனருடன் ஹீரோவாக இணையும் சூரி.?... வெளியான பரபரப்பு தகவல்.!