மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
விடுதலை 2 எப்போ ரிலீஸ்? வாடிவாசல் என்னாச்சு? சூப்பர் அப்டேட் கொடுத்த இயக்குனர் வெற்றிமாறன்!!
தமிழ் சினிமாவில் பல சூப்பர் ஹிட் திரைப்படங்களை கொடுத்து முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் வெற்றிமாறன். இவரது இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்த விடுதலை படத்தின் முதல் பாகம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றியடைந்தது. இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.
விடுதலை இரண்டாம் பாகம் ரிலீஸ்
விடுதலை படத்தில் நடிகர் சூரி கதாநாயகனாக நடித்திருந்தார். மேலும் விஜய் சேதுபதி முக்கிய ரோலை ஏற்று நடித்திருந்தார். இந்த நிலையில் விடுதலை 2 ரிலீஸ் குறித்து ரசிகர்கள் தொடர்ந்து கேள்வியெழுப்பி வருகின்றனர். மேலும் வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாக உள்ளதாக கூறப்பட்டிருந்த வாடிவாசல் படம் குறித்த அப்டேட்டுக்காகவும் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
இதையும் படிங்க: விடுதலை 2ம் பாகத்தை வெளியிட விடமாட்டேன்.. பிரபல இயக்குனர் ஆவேசம்!
சூர்யாவின் வாடிவாசல்
இந்த நிலையில் அண்மையில் செய்தியாளர்கள் சந்திப்பில் இயக்குனர் வெற்றிமாறனிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், விடுதலை இரண்டாம் பாகம் படப்பிடிப்பு இன்னும் 15, 20 நாட்கள் மட்டுமே மீதமுள்ளது. அது முடிந்தவுடன் ஓரிரு மாதங்களில் படம் வெளியாகும். மேலும் விடுதலை 2 முடிந்தவுடன் மூன்று மாதங்களில் வாடிவாசல் துவங்கும். அதில் எந்த சந்தேகமும் இல்லை என்று இயக்குனர் வெற்றிமாறன் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: விடுதலை 2 படத்தில் இணைந்த முக்கிய நடிகர்.. வைரல் புகைப்படம்.!