திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
" ஹிட் படத்தில் பாதி கதையை மட்டும் கேட்டு நடிக்க மறுத்த விஜய்! கோபம் கொண்ட இயக்குனர்!
2005ம் ஆண்டு வெளியானது லிங்குசாமி எழுதி, இயக்கிய "சண்டக்கோழி" திரைப்படம். இப்படத்தில் விஷால் ஹீரோவாகவும், மீரா ஜாஸ்மின் ஹீரோயினாகவும் நடித்திருந்தனர். மேலும் ராஜ்கிரண், லால், சுமன் ஷெட்டி, தலைவாசல் விஜய், கஞ்சா கருப்பு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
இந்நிலையில் இத்திரைப்படம் வெளியாகி 18 ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து சமீபத்தில் விஷால் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டிருந்தார். இந்நிலையில் இயக்குனர் லிங்குசாமி இப்படம் குறித்து ஒரு சுவாரசிய தகவலை பகிர்ந்துள்ளார்.
அதில் அவர், "முதலில் இந்தப் படத்தில் விஜயை தான் நடிக்க வைக்க நினைத்தேன். அவரிடம் படத்தின் கதையையும் கூறினேன். முதல் பாதியை ஆர்வமாகக் கேட்ட விஜய், இரண்டாம் பாதியில் ராஜ்கிரண் என்ட்ரி காட்சியைக் கூறியதும் மீதி கதையைக் கேட்கவில்லை.
இதனால் நான் அவர்மீது கோபமாக இருந்தேன். இதையடுத்து தான் விஷால் இந்த படத்திற்குள் வந்தார். இதையடுத்து ஒரு முறை விஜயை ஒரு விழாவில் பார்த்தபோது சண்டக்கோழி படத்தை பாராட்டினார். விஷால் தான் இந்தக் கதைக்கு பொருத்தமாக இருக்கிறார் என்று விஜய் கூறினார்" என்று கூறியுள்ளார்.