விஜய் பட வில்லனுக்கு படப்பிடிப்பின் போது 7 நாட்கள் சாப்பாடு போடாமல் கொடுமை... மனம் திறந்த வில்லன் நடிகர்.!?



vijay-movie-villain-actor-acting-without-take-any-food

தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் நடித்து பெயர் பெற்ற நடிகனாக இருப்பவர் ஜெகபதி பாபு. இவர் தெலுங்கு மொழியில் பல படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து தனது திரையுலக பயணத்தை ஆரம்பித்தார்.


ஜெகபதி பாபு
ரஜினி நடித்த லிங்கா படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானார். இதன் பின்பு பைரவா, விசுவாசம், அண்ணாத்த போன்ற படங்களில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 2000 ஆம் ஆண்டு 'மனோகரம்' என்ற மலையாளப் படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகர் விருதை ஜெகபதி பாபு பெற்றிருக்கிறார்.

இந்நிலையில் ஒரு பேட்டியின் போது முதன்முதலாக மனம் திறந்த இவர் திரையுலக அனுபவங்கள் குறித்து கூறியிருக்கிறார். அதில் " நான் திரையுலகிற்கு வந்து 35 ஆண்டுகள் ஆகிய நிலையில் எனக்கு நடிப்பதை தவிர வேறு எதுவும் தெரியாது. சாகசம் என்ற திரைப்படத்தில் இரண்டாவது கதாநாயகனாக நடிக்கும்போது ஏழு நாட்கள் சாப்பாடு எதுவும் தரவில்லை என்று கூறியிருந்தார்.

ஜெகபதி பாபு

சாகசம் படப்பிடிப்பின் போது நடந்த அவமானங்கள் என் வாழ்வின் சிறந்த பாடங்கள். பிற மொழிகளின் படங்களில் நடித்தால் மட்டுமே தன் மொழியில் நடிக்கும் போது மரியாதை கிடைக்கும் என்று கூறினார். மேலும் அவருக்கு திருமணத்தின் மீது பெரிய நம்பிக்கை இல்லை என்றும், தன் இரண்டாவது பெண்ணுக்கு திருமணம் செய்து கொள்ளாதே என்று அறிவுரை வழங்குவேன் என்றும் கூறியிருக்கிறார்.