96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
விஜய் டிவியை விட்டு ஜீ-தமிழ் செல்கிறாரா முன்னணி தொகுப்பாளர்?.. யார் தெரியுமா?..! வெளியான அதிர்ச்சி தகவல்..!!
கோலிவுட்டில் சின்னத்திரை ரசிகர்களால் கொண்டாடப்படும் தொலைக்காட்சிகளில் முக்கியமானது விஜய் டிவி. இந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நெடுந்தொடர்கள் மற்றும் நிகழ்ச்சிகள் என அனைத்தும் ரசிகர்களின் மனதை கவரும் விதமாக அமைந்துள்ளது.
தற்போது இதில் MR & MRS சின்னத்திரை, கலக்கப்போவது யாரு சாம்பியன்ஸ் மற்றும் பிபி ஜோடிகள் 2 போன்றவை ஒளிபரப்பாகி வருகிறது. இதனைதொடர்ந்து விஜய் டிவியின் பிரம்மாண்ட நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ். இதன் ஆறாவது சீசன் விரைவில் தொடங்கவுள்ளது.
இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசனில் போட்டியாளராக வைல்ட் கார்டில் என்ட்ரி கொடுத்தவர் தொகுப்பாளனி அர்ச்சனா. இவர் விஜய் டிவிக்கு வருவதற்கு முன்னதாக ஜீ தமிழில் பல ஆண்டுகளாக பல நிகழ்ச்சிகளை சிறப்பாக தொகுத்து வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதில் ஒன்றுதான் சூப்பர்மாம். இந்த நிகழ்ச்சியை அர்ச்சனா மற்றும் அவரது மகள் சாரா இருவரும் தொகுத்து வழங்கிய நிலையில், சூப்பர் மாம் நிகழ்ச்சியின் புதிய சீசன் துவங்கவுள்ளது.
இதற்காக மீண்டும் ஜீ தமிழில் தனது மகளுடன் தொகுப்பாளனி அர்ச்சனா என்ட்ரி கொடுத்துள்ளார் என்று தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த நிகழ்ச்சியின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு ப்ரோமோ வீடியோவாக வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.