நடிகர் விஷாலுக்கு என்னதான் ஆச்சு? வெளியானது மருத்துவ அறிக்கை.! விபரம் உள்ளே.!
இவர்தான் விஜய் டிவி பிக் பாஸ் குரல் பிரபலமா? வெளியான புகைப்படம்!
விஜய் தொலைக்காட்ச்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் பெரும்பாலும் மக்கள் மத்தியில் நல்லவரவேற்பை பெறுகிறது. அது இது எது, கலக்கப்போவது யாரு, சூப்பர் சிங்கர் போன்ற நிகழ்ச்சிகள் காலம் காலமாக மக்கள் மத்தியில் வெற்றிபெற்றுள்ளது. அந்த வரிசையில் தற்போது இடம்பிடித்துள்ளது பிக் பாஸ்.
கமல் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் போட்டி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. போட்டியின் முதல் சீசன் மாபெரும் வெற்றிபெற்றதை தொடர்ந்து இரண்டாவது சீசன் தொடங்கப்பட்டு அதுவும் வெற்றிபெற்றது. இந்நிலையில் விரைவில் பிக் பாஸ் சீசன் மூன்று தொடங்கலாம் எனவும் கூறப்படுகிறது.
பிக் பாஸ் தொடரின் வெற்றிக்கு காரணமான ஒன்றில் முகம் தெரியாத பிக் பாஸின் குரலும் ஓன்று. இரண்டு சீசன்கள் முடிந்துவிட்ட நிலையில் இன்றுவரை அந்த குரலுக்கு சொந்தக்காரர் யார் என்பது பற்றி உறுதியான தகவல்கள் வெளியாகிவிலை.
இவர்தான், அவர்தான் என்று அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் ஒருசிலரின் புகைப்படம் வெளியாவது உண்டு. அந்த வகையில் இவர்தான் அந்த பிக் பாஸ் குரலுக்கு சொந்தக்காரர் என்று ஒருவரின் புகைப்படம் வெளியாகியுள்ளது.
ஆர் வேர் யாரும் இல்லை, பிரபல நடிகரும், தொகுப்பாளருமான ரிஷி தானாம் அது. இவர் சன் தொலைக்காட்சியில் "டீலா நோ டீலா", "கையில் ஒரு கோடி ஆர் யூ ரெடி", போன்ற கேம் ஷோக்களை தொகுத்து வழங்கி புகழ்பெற்றார்.
பிக் பாஸின் அந்த கம்பீர குரலுக்காக ரிஷியின் குரலை தொழில்நுட்பம் கொண்டு சில மாறுதல்களை செய்தனர் என்று கூறப்படுகிறது. ஆனால் இது குறித்த எந்த வித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரை வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.