96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
தஞ்சைக்கு வா.. அழைப்பு விடுத்த ஆதித்த கரிகாலனுக்கு குசும்பாக பதிலளித்த வந்தியதேவன்! வைரலாகும் கலகலப்பான பதிவு!!
கல்கி எழுதிய 'பொன்னியின் செல்வன்' நாவலை தழுவி
மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன். லைகா புரொடக்ஷன்ஸ், மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
இரு பாகங்களாக உருவாகும் பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30-ந் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என 5 மொழிகளில் வெளியாக உள்ளது. இதில் வந்தியத்தேவனாக கார்த்தி, ஆதித்த கரிகாலனாக விக்ரம், அருண்மொழி வர்மனாக ஜெயம் ரவி, குந்தவையாக திரிஷா, நந்தினியாக ஐஸ்வர்யா ராய், பெரிய பழுவேட்டரையராக சரத்குமார் மற்றும் சின்ன பழுவேட்டரையராக பார்த்திபன் என பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர்.
படம் ரிலீஸாக இன்னும் இரு வாரங்களே இருக்கும் தஞ்சை பெரிய கோவிலில் பிரம்மாண்டமாக பிரமோஷன் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில் பிரபலங்கள் பலரும் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் ஆதித்த கரிகாலனாக நடிக்கும் விக்ரம் தனது ட்விட்டர் பக்கத்தில், சரி தஞ்சைக்கு வருகிறேன். எட்டு திக்கும் புலிக்கொடி நாட்டும் திரைப்படம் தொடங்கும் முன் பெருவுடையாரின் ஆசி வேண்டும் அல்லவா? குந்தவை உடன் வருகிறாயா? வந்திய தேவன் வருவான். என் நண்பா வருவாய் தானே? அப்படியே அந்த அருண்மொழியையும் இழுத்து வா என பதிவிட்டுள்ளார்.
சரி தான்.இளைப்பாறு நண்பா. Detox. Rest. Recuperate.
— Aditha Karikalan (@chiyaan) September 14, 2022
சில போர்களை தனியாக சென்று தான் வெல்ல வேண்டும். தஞ்சை சென்று நம் அன்பு படைகளை சந்தித்தே ஆகவேண்டும். See you on the other side வந்தியத்தேவா. @Karthi_Offl #PonniyinSelvan #AdithaKarikalaninThanjavur pic.twitter.com/lJ2CvsECi0
இதை கண்ட கார்த்தி குசும்பாக, இளவரசே உங்களுக்காக தஞ்சை முதல் லங்கை வரை சென்ற களைப்பே இன்னும் தீரவில்லை. எனக்கு தற்பொழுது காய்ச்சல் இருப்பதால் நான் வீட்டில் இருந்து வேலை செய்கின்றேன். வீடியோ காலில் இளவரசியிடம் பேசி சாரி சொல்லிவிடுகின்றேன் என பதிவிட்டிருந்தார். அதற்கு விக்ரம், சரி தான். இளைப்பாறு நண்பா. சில போர்களை தனியாக சென்று தான் வெல்ல வேண்டும். தஞ்சை சென்று நம் அன்பு படைகளை சந்தித்தே ஆகவேண்டும். மீண்டும் சந்திப்போம் வந்தியதேவா என கூறியுள்ளார். இந்த கலகலப்பான பதிவு வைரலாகி வருகிறது.