நடிகர் விஷாலுக்கு என்னதான் ஆச்சு? வெளியானது மருத்துவ அறிக்கை.! விபரம் உள்ளே.!
என்னமா சமாளிக்கிறாங்கப்பா! கையில் பீர் பாட்டிலுடன் போஸ்டர் வெளியிட்டது குறித்து நடிகர் விஷால் விளக்கம்
‘சண்டகோழி-2’ படத்துக்கு பிறகு ‘அயோக்கியா’ என்ற படத்தில் நடித்து வருகிறார் நடிகர் விஷால். இதில் கதாநாயகியாக ராஷி கண்ணா நடிக்கிறார். ஏ.ஆர்.முருகதாசிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய வெங்கட் மோகன் இந்த படத்தை இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இந்நிலையில் நவம்பர் 19 ஆம் தேதி இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. இதில் நடிகர் விஷால் பீர் பாட்டிலுடன் ஜீப்பில் மறந்துள்ளார். இதற்கு பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் ராமதாஸ் ட்விட்டரில் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
அதில் அவர் "அயோக்யா’ திரைப்படவிளம்பரத்தில் கதாநாயகர் விஷால் பீர் புட்டியுடன் தோன்றுகிறார். நடிகர் சங்க பொதுச்செயலர் என்ற முறையில் புகைக்கும் காட்சிகளில் நடிகர்கள் நடிப்பதை தடை செய்ய வேண்டும் என கடிதம் எழுதினேன். இப்போது புகையை தாண்டி பீர் பாட்டிலுடன் நடிக்கிறார். என்னவொரு சமூகப் பொறுப்பு!" என்று கூறியுள்ளார்.
இந்நிலையில், அயோக்யா பட போஸ்டர் விவகாரம் தொடர்பாக ஆங்கில ஊடகம் ஒன்றில் விஷால் விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர், "நான் பீர் பாட்டிலை கையில் வைத்திருந்தேனே தவிர குடிப்பதுபோல் இல்லை. கையில் வைத்திருப்பது குடிப்பதாக ஆகாது. இந்த படத்தில் நான் போலீசாக நடிக்கிறேன். நான் துப்பறியும் ஒரு குற்றத்தில் அந்த பாட்டில் ஒரு தடயமாக கிடைக்கிறது. அதை வைத்து நான் சண்டையிடுவதாக காட்சி அமைந்துள்ளது. இதைத் தான் அந்த போஸ்டரில் சொல்லி இருக்கிறோம்" எனத் தெரிவித்துள்ளார்.