96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
புனிதர்கள் வாழ்ந்த இந்த பூமியில் இப்படியா..தொடரும் கொடூரங்கள்! வேதனையுடன் நடிகர் விவேக் வெளியிட்ட பதிவு!
உத்தரப்பிரதேச மாநிலம் ஹாத்ரஸ் பகுதியில் 19 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு மிகவும் கொடூரமான முறையில் கொல்லப்பட்டார். இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் பலரும் கொந்தளித்துபோய் இந்த சம்பவத்திற்கு எதிராக சமூகவலைதளங்களில் கண்டனம் தெரிவித்து வந்தனர்.
அதனை தொடர்ந்து திருப்பூரில் வட இந்திய பெண் ஒருவர் கூட்டு பலாத்காரம் செய்து கொல்லப்பட்டார். இது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இத்தகைய தொடர் சம்பவங்களுக்கு எதிராக பலரும் குரல் எழுப்பி வருகின்றனர். இந்நிலையில் இத்தகைய பாலியல் வன்கொடுமை கொடுத்து மிகவும் வருத்தத்துடன் நடிகர் விவேக் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அன்பே சிவம்- திருமூலர்; அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்?- திருவள்ளுவர்; ஜீவகாருண்யமே மோட்சத் திறவுகோல்-வள்ளலார் எல்லாவற்றுக்கும் மேல் அன்பு- விவேகானந்தர். இப்படிப்பட்ட புனிதர்கள் வாழ்ந்த பூமியில்- கற்பழிப்பு, கொலை. 😭
— Vivekh actor (@Actor_Vivek) October 1, 2020
அதில் அவர், அன்பே சிவம்- திருமூலர்; அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்?- திருவள்ளுவர்; ஜீவகாருண்யமே மோட்சத் திறவுகோல்-வள்ளலார் எல்லாவற்றுக்கும் மேல் அன்பு- விவேகானந்தர். இப்படிப்பட்ட புனிதர்கள் வாழ்ந்த பூமியில்- கற்பழிப்பு, கொலை என்று வேதனையுடன் பதிவிட்டுள்ளார்.